நீங்கள் இளமையாகவே இருக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!


ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றை சரிவிகித உணவாக உட்கொள்வதும் அவசியமானது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

உள்ளம் புத்துணர்வோடு இருந்தால் தான் முகமும் பொலிவு பெற்று புறத்தோற்றத்தில் அதன் அழகு வெளிப்படும்.

வயது அதிகரித்தாலும் இளமைப் பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு அகம், புறம் இரண்டையும் பேணி வந்தால் போதும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

வயதானாலும் இளமையை தக்க வைக்கும் டிப்ஸ்! உணவு பழக்கம்முகத்திற்கு அழகு சேர்க்கும் அம்சங்கள்:

அழகு என்றதும் நிறைய பேர் முகப்பொலிவுக்கும், நிறத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக அழகுசாதன பொருட்களை மட்டுமே சார்ந்திருப்பார்கள்.

அப்படி இருக்காமல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ் வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அவையும் அழகை மெருகேற்றும் தன்மை கொண்டவை. தண்ணீரும் போதுமான அளவு பருக வேண்டும்.

உடல் எடையில் கவனம் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவற்றை சரிவிகித உணவாக உட்கொள்வதும் அவசியமானது.

உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க தேவையற்ற துரித உணவுகளை தவிர்ப்பதுடன், சீரான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் வேண்டும்.

Comments

Popular posts from this blog

முடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு

ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் வருவது ஏன்?