பொடுகை போக்க கணவரின் சிறுநீரில் தலையை அலசும் பெண்…!

நியுசிலாந்தை சேர்ந்த ஒரு ஜோடி. அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக காடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களும் இயற்கையானது. குறிப்பாக அந்த பெண், தனது சிறுநீரை தனது தலையை அலசுவதற்கு பயன்படுத்துகிறார். கேட்கவே தலை சுற்றுகிறதா? தொடர்ந்து படியுங்கள்… இன்னும் அதிகமாக இதனைப் பற்றி தெரிந்து கொள்ள.. நாம் மேலே குறிப்பிட்ட ஜோடி, மிரியம் லான்ஸ்வுட் மற்றும் பீட்டர் . அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் சிறு சிறு விஷயங்களை நம்மிடம் தற்போது வெளியிட்டுள்ளனர். வாருங்கள் அது என்னவென்று தெரிந்து கொள்வோம் பீட்டரும் அவர் மனைவி மிரியமும். ஒரு ஆண்டில் நாம் கடந்து வரும் நான்கு காலங்களையும், அதாவது, கோடை, மழை, குளிர் மற்றும் வசந்த காலங்களை காட்டில் கழிக்க விரும்பினர். அதற்கான ஏற்பாடுகளுடன் முதல் குளிர் காலத்தில் அவர்கள் காட்டை நோக்கி பயணித்தனர். பயணத்தின் போது மிரியம் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூவை எடுத்துச் செல்ல மறந்து விட்டதால் அவருடைய தலையில் பொடுகு பாதிப்பு ஏற்பட்டது. பொடுகைப் போக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டார், மிரியம். இயற்கையான முறைகள் பற்றி விவாதிக்கும் நேரத்தில், பீட்டர், எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் வழியை அறிவுறுத்தினார். அதாவது, எஸ்கிமோக்கள் பொடுகைப் போக்க தங்கள் முதல் சிறுநீரைப் பயன்படுத்துவார்கள். அதே வழியைப் பின்பற்றி பொடுகைப் போக்க தன் மனைவியிடம் கூறினார் பீட்டர். கணவன் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள முடிவெடுத்தார் மிரியம். மிரியமுக்கு ஒரு சிறிய டப்பாவில் காலை சிறுநீரை சேகரிப்பது கடினமாக இருந்தது. ஆனாலும் தனது தலையில் உள்ள பொடுகை எப்படியாவது விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தினமும் சிறுநீரை சேகரித்து வந்தார். சிறுநீரை தலை முடி உறிஞ்சும் விதத்தில் முதலில் ஆற்று நீரில் தலையை ஈரம் செய்த பின், சிறுநீரைக் கொண்டு தலை முடியை அலசி வந்தார். இந்த சிறுநீர் உத்தி தவிர, வேறு சில இயற்கைப் பொருட்களையும் அவர்கள் பயன்படுத்தி வருவதாகக் கூறினார். பல் துலக்க கரி மற்றும் சாம்பலை பயன்படுத்துகின்றனர். இது தவிர, மிரியம் தனது மாதவிடாய் காலங்களில் டாம்பூன் பயன்படுத்துவதற்கு மாற்றாக மூன் கப் என்னும் மாதவிடாய் கப் பயன்படுத்துகிறார். இது முற்றிலும் பாதுகாப்பான, சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ற பாதுகாப்பான ஒரு பொருளாகும். இதனை அருகில் உள்ள ஆற்றில் சுத்தம் செய்து பயன்படுத்திக் கொள்வதால், எங்கு சென்றாலும் டாம்பூனை சுமந்து செல்லும் கஷ்டம் இல்லை என்று அவர் சிரிக்கிறார்